ஏலக்காய் தோட்டத்தில் புகுந்து தொழிலாளியை கொன்ற புலி.. அச்சத்தில் நீலகிரி மக்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஏலக்காய் தோட்டத்தில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகு என்பவர் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், காலை வரை திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை, தேயிலை தோட்டம் அருகேயுள்ள ஏலத்தோட்டத்தில் மகுவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த பகுதியில் புலி ஒன்று நடமாடி வருவதாகவும், ஏற்கனவே 10 மாடுகளை அது கொன்றுள்ளதாகவும், மகுவை அந்த புலிதான் கொன்றிருக்கும் எனவும் மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய ஆய்வில், புலி தாக்கியதில் மகு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிரடிப்படை வீரர்களும், பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் தேவர்சோலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
பந்திப்பூர் வனவிலங்கு சரணாலய பகுதியில் இருந்து புலி ஊடுருவியிருக்க கூடும் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications