தமிழக - கேரளா எல்லையில் ஒற்றை புலியால் பீதி: புலியை பிடிக்க கூண்டு வைத்தது வனத்துறை
செங்கோட்டை: தமிழக-கேரள எல்லை பகுதியிலுள்ள புளியரை வனப்பகுதியில் மாடு, ஆடுகளை வேட்டையாடி வரும் ஒற்றைப் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழக-கேரள எல்கையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான தமிழக பகுதியைச் சேர்ந்த புளியரையிலும், கேரள பகுதியைச் சேர்ந்த ஆரியங்காவு பகுதியிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புலி, யானை, சிறுத்தைப்புலி, கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.

புளியரை:தமிழக கேரளா எல்லைப்பகுதியும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான புளியரை மற்றும் ஆரியங்காவு அடர்ந்த வனப்பகுதியாகும் இந்த வனப்பகுதியில் பல்வேறு வகையான அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இங்கு வாழும் சிறுத்தைப்புலி, புலி ஆகிய விலங்குகள், மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தும், நிலங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளை வேட்டையாடிச் செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புளியரை ஸ்ரீமூலப்பேரி நீர்த்தேக்கம் பகுதியில் ஒற்றைப்புலி நடமாடி வருகிறது. இப்புலி மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு மாட்டை வேட்டையாடியது. அத்துடன், இந்த வனத்தை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியான ஆரியங்காவு கறவன்பாறை பகுதியில் ஜோனி என்பவருடைய தொழுவத்தில் கட்டியிருந்த 3 ஆடுகளை புலி வேட்டையாடிச் சென்றது. இந்த 2 சம்பவங்களிலும் ஒற்றைப் புலி தான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கழுதுருட்டி பகுதியில் சோமன் என்பவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டையும் அடித்து கொன்றது. இந்த ஒற்றை புலியின் நடமாட்டம் இருமாநில எல்லைப்புற மலைஅடிவாரப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஒற்றை புலியை கூண்டு வைத்து பிடிக்க நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி உத்திரவிட்டுள்ளார்.
கூண்டு வைப்பதற்கு புளியரை, கோட்டைவாசல், பகவதிபுரம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் வனத்துறையினர் தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்,
-
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications