For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி... உணவு, உறக்கம் கிடையாது.. 24/7 செய்தி வழங்கும் உங்கள் ஒன்இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    24/7 செய்தி வழங்கும் உங்கள் ஒன்இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள்!- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் இன்றி மக்களுக்காக செய்திகளை வழங்கி வருகிறார்கள்.

    தமிழ் செய்தி சேனல்கள், செய்தித்தாள்கள், ஆன்லைன் மீடியாக்கள், ஆங்கில ஊடகங்கள் எல்லோரும் இணைந்து இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். கணிசமான எண்ணிக்கையில் பெண் பத்திரிக்கையாளர்கள் இரவு முழுக்க செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்கள்.

    காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது.

    ஒன்இந்தியா குழுமம்

    ஒன்இந்தியா குழுமம்

    உங்கள் ஒன்இந்தியா குழுமமும் இரவு பகலாக செய்தி வழங்கும் பணியில் இடைவிடாமல் இயங்கி வருகிறது. ஒன்இந்தியா தமிழ் உட்பட ஒன்இந்தியா குழுமத்தில் உள்ள அனைத்து மொழி செய்தி தளங்களும் செய்திகளை உடனுக்குடன் அளித்து வருகிறது. இரவு பகல் பாராது, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல் காவேரி மருத்துவமனை களத்தில் நடக்கும் விஷயங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது.

    தண்ணீர் தண்ணீர்

    காவேரி மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் பத்திரிக்கையாளர்கள், போதிய உணவு, போதிய தண்ணீர் வசதி இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு குடிநீர் பிரச்சனைதான் அதிகம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த செய்தியாளர் அங்கு சிதறி கிடக்கும் வாட்டர் பாட்டில்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

    பெண்கள் பாதுகாப்பு

    ஆண் பெண் பாகுபாடு இன்றி செய்தியாளர்கள் மூன்று இரவுகளாக தூங்காமல் செய்திகளை வழங்கி வருகிறார்கள். சென்னையில் இருந்து செய்தியை உலகம் முழுக்க தெரியப்படுத்தும் இதுபோன்ற பெண் பத்திரிக்கையாளர்கள் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறார்கள்.

    தூக்கம் எங்கே

    முக்கியமாக இரவு முழுக்க செய்தி தர வேண்டும் என்பதால், செய்தியாளர்கள் சாலையிலேயே உறங்கிவிடுகிறார்கள். பலர் இரவு முழுக்க உறங்காமல் அதிகாலையில் சில மணிநேரம், அருகில் இருக்கும் பிளாட் பார்மில் உறங்கிக் கொள்கிறார்கள்.

    இருள்

    அதேபோல் உணவு சாப்பிட இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சமயங்களில் பலருக்கு உணவும் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் உணவையும் இப்படி இருளில் மொபைல் விளக்கில் சாப்பிடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    காத்திருப்பு

    மருத்துவமனை வளாகத்தில் நடுஇரவில் தூக்கமின்றி காத்திருக்கும் செய்தியாளர்கள்.

    தூக்கம்

    கடந்த மூன்று நாட்களாக இவர்களில் பலர் தூங்கவில்லை. இதனால் அவர்களில் சிலருக்கு உடலில் பிரச்சனை கூட ஏற்பட்டு இருக்கிறது.

    கஷ்டம்

    அதேபோல் புகைப்படக்காரர்கள் சரியான புகைப்படங்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

    English summary
    Tired, Insomnia, Hungry - Story of Journos in Cauvery Hospital as Karunanidhi health is not so good.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X