Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கடலில் கருப்பா அதென்ன? திடீர்னு நிறம் மாறிய பீச்.. குறுக்கே குவிந்த கற்கள்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி: கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் கடற்கரை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பக்தர்கள் புனித நீராடுவதில் சிரமம் ஏற்பட்டுவரும் நிலையில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடக்கிறது திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்?

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. 15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அடுத்த வருடம் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.. இந்த கும்பாபிஷே பணிகள் கடந்த 2022-ம் ஆண்டிலிருந்தே சுமார் 100 கோடி செலவில் நடந்துகொண்டிருக்கின்றன..

tiruchendur thiruchendur murugan temple

உலகளவில் புகழ்பெற்ற இந்தக்கோயிலில், விஷேச, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கமாக உள்ளது. அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதும் இயல்பான ஒன்றாகும்.

பவுர்ணமி நாட்கள்: மேலும், பவுர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். நேற்றைய தினம் ஆங்கில புத்தாண்டு என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே திருச்செந்தூரில் காணப்பட்டது.

இதனிடையே, கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறதாம். இந்த பள்ளத்தை கண்டு பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்..

கடல் அரிப்புகள்: இதன்காரணமாக கடற்கரையில் கோவிலுக்கு முன்பக்கமுள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து, கடலுக்குள் இறங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான கற்களும் இந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கடலில்இறங்கி குளிக்க முடியாத சூழல் உள்ளது. கடந்த மாதமும் இப்படித்தான் பக்தர்கள் படியிறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. உடனே, அந்த இடத்தில் மண்ணை கொட்டி கோவில் நிர்வாகம் அதை சீர் செய்திருந்தனர்.
2 மாதங்களுக்கு முன்பு இதே போல தான் நடந்தது.. சந்தோஷ மண்டபம் மற்றும் அய்யா வைகுண்டர் அவதார பதி பகுதியில், கடல்அரிப்பு ஏற்பட்டு பாதிப்படைந்த பகுதியில், ராட்சத கற்களை போட்டு அந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது.

10 அடி ஆழம்: ஆனால் அதே இடத்தில் முன்பைவிட அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டதால் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி கோவில் கடற்கரை பணியாளர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல, கோவில் கடற்கரை கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வே தண்ணீர் கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இதை பார்த்தும் பக்தர்கள் அச்சதில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை முடிவடைந்தநிலையில், ஒருவாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடற்கரை பகுதியில் கடல் பெருக்கு ஏற்பட்டு அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறுவதால் தண்ணீர் குழப்பிய நிலையில் அதாவது கருப்பு நிறத்தில் மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.

கோரிக்கை: அதேபோல, கடலில் நீராடும் பக்தர்கள், பாறைகளில் மோதி காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே, கோயில் கடற்கரை பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும், கடல் சீற்றத்தில் இருந்து திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதுகாக்க முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பக்தர்கள் ஆபத்தில் சிக்காமல் தடுக்க கடற்கரை பகுதியில் எச்சரிக்கை பலகைகளையும் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+