திருச்செந்தூர் முருகன் கோயில் கருவறையை வீடியோ எடுத்த ஜெயிலர் பட நடிகர்! போலீஸில் புகார்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக திரைப்பட துணை நடிகரும் இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது கோயில் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் துணை நடிகராக நடித்தவர் செல்வா. இவர் இன்ஸ்டா பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர் திருச்செந்தூருக்கு சென்று வந்த பயணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வருவதும், அங்கு புகைப்படம் எடுப்பதுமாக இருந்தார். பின்னர் கடற்கரையில் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் பட்டையிட்டுக் கொண்டு அவர் பச்சை வேட்டியில் கோயிலுக்கு சென்றார்.
அங்கு மேல் சட்டையில்லாமல் சென்ற அவர் கோயிலுக்குள் ஒரு பையுடன் சென்றார். பிறகுதான் அந்த வீடியோவில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த வீடியோவில் மூலவரின் காட்சிகளும் வெளியாகியிருந்தது. மேலும் அவர் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதை பார்த்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சி! அதாவது கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி எடுத்துச் சென்றார், எல்லாவற்றுக்கும் மேல் மூலவரை எந்த கோயிலிலும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கக் கூடாத நிலையில் இவர் எப்படி எடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த வீடியோ வைரலான நிலையில் செல்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். கோயிலின் புனிதத் தன்மையை காக்க பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செல்போனை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைத்துவிட்டு பிறகு சுவாமி தரிசனம் செய்துவிட்டுதான் அதை பெற்றுக் கொள்ள முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில் திருச்செந்தூரில் எப்படி செல்போன் அனுமதிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தங்கள் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாக 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள பாசிபிடித்த பாறைகள் தெரிய ஆரம்பித்துள்ளன.
மேலும் அவ்வப்போது சுவாமி சிலைகளும் கல்வெட்டுகளும் கிடைப்பதால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். கோயில் கல்வெட்டுகளில் பல்வேறு தகவல்கள் இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் துணை நடிகர் ஒருவர் கோயிலின் கருவறையையே வீடியோ எடுத்து இன்ஸ்டா ரீல்ஸில் போட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications