தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: சென்னை 105, திருச்சியில் 107 டிகிரி கொளுத்துகிறது
சென்னை: தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று வெயில் 103 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது. சென்னையில் சில நாட்களாக வெயில் மிதமாக இருந்த நிலையில் இன்று 105 டிகிரி கொளுத்தியது. தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மதுரை, சேலம், உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் இருந்தது.

வெள்ளிக்கிழமை பதிவான வெயில் அளவு 4 மணி நிலவரம் ( ஃபாரன்ஹீட்டில்):
இன்றைய வெப்பநிலை
சென்னை : 105
மதுரை : 102
திருச்சி : 107
கோவை : 100
திருப்பூர் : 101
சேலம் : 103
வேலூர் : 104
ஈரோடு : 104
கரூர் : 105
கிருஷ்ணகிரி : 100
தருமபுரி : 102
தஞ்சாவூர் : 101
கடலூர் : 100
திண்டுக்கல் : 103
விருதுநகர் : 103
திருநெல்வேலி : 95
தூத்துக்குடி : 99
கன்னியாகுமரி : 94
கொடைக்கானல் : 78
உதகமண்டலம் : 75
காலை முதலே வெயில் சுட்டெரித்து வருவதால் சாலைகளில் கானல் நீரோடுகிறது. வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்க இன்றும் இரு வாரங்கள் உள்ள நிலையில் அனலாய் வெயில் தகிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேற்கில் இருந்து வறண்ட தரைக்காற்று வீசுவதால் வடமாவட்டங்களில் அதிக அளவு வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இதனை தெரிவித்தார். ஈரப்பதம் குறைந்த தரைக்காற்றால் வடமாவட்டங்களில் 2 லிருந்து 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications