Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 சவரன் தங்க நகை.. திருப்பத்தூரில் காரில் வெயிட்டிங்கில் காதலன்.. வீட்டிற்குள் திகைத்து நின்ற கணவர்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருமணத்துக்கு மீறிய உறவில் ஈடுபட்ட மனைவி, மனம்திருந்தி வாழ முயற்சித்துள்ளார்.. ஆனால், வீடுதேடி வந்து தொல்லை தந்துள்ளது ஒரு கும்பல்.. இவர்களை ராஜபாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?

திருப்பத்தூர் அருகே ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்.. இவருக்கு 38 வயதாகிறது.. கார் டிரைவராக உள்ளார்.. இவருக்கு காட்பாடி சேர்ந்த சுரேஷ் என்ற கார் டிரைவர் அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.

Tirupathur 15 sovereign gold Tirupattur

நண்பர்கள்: இதையடுத்து, இருவரும் காட்பாடி பகுதியிலேயே ஒன்றாக சேர்ந்து, டிரைவிங் தொழிலை செய்ய துவங்கியிருக்கிறார்கள்.. இதனால், திருப்பத்தூரிலிருந்த வீரபத்திரன், காட்பாடியில் பகுதியிலேயே, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மனைவி சத்யாவுடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, வீரபத்திரன் மனைவி சத்யாவிற்கும், சுரேஷூக்கும் நட்பு ஏற்பட்டு, இதுவே கள்ளக்காதலாக மாறியது.. ஒருகட்டத்தில் வீரபத்திரனுக்கு இந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சி அடைந்தார்.. சுரேஷிடம் பழகுவதை உடனடியாக நிறுத்தும்படியும் மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனால், சத்யா அவரது பேச்சை காதில்வாங்கி கொள்ளாமல், சுரேஷூடன் கள்ள உறவை தொடர்ந்துள்ளார்..

காட்பாடி: இதனால் விரக்தியடைந்த வீரபத்திரன், காட்பாடியிலேயே சத்யாவை விட்டு விட்டு, தன்னுடைய சொந்த ஊரான ராஜபாளையம் பகுதிக்கு திரும்பி வந்துவிட்டார்.. பிறகு, அடுத்த சில மாதங்களில் சத்யாவின் தந்தை இறந்துவிட்டார்.. தந்தையின் மரணத்துக்கு பிறகு, வீரபத்திரனிடம் சமாதானப்பேச்சு நடத்தப்பட்டது.. இனிமேல் ஒன்றாக சேர்ந்து வாழ சத்யா விருப்பம் தெரிவித்ததையடுத்து, போலீஸ் ஸ்டேஷனிலும் இது சம்பந்தமான பஞ்சாயத்து செய்யப்பட்டது.

சத்யா, போலீசார் என அனைவரும் சமாதானம் செய்த நிலையில், வீரபத்திரனும் சத்யாவுடன் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.. இதற்கு பிறகு சத்யாவும் சுரேஷூடனான உறவை துண்டித்துவிட்டதாக தெரிகிறது.

கொள்ளை: ஆனால், சுரேஷ் தொடர்ந்து சத்யாவுடன் போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்து கொண்டேயிருந்தார்.. கடைசிவரை சத்யாவுடன் அவரால் பேச முடியவில்லை.. எனவே, தன்னுடைய நண்பர்கள் ஜாபர், கர்ணன், மணிகண்டன், சசிதரன், மேகராஜ் ஆகிய 5 பேரையும் காரில் அழைத்து கொண்டு, ராஜபாளையம் பகுதியில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் சுரேஷ்.. காரில் சுரேஷ் உட்கார்ந்துகொண்டு, நண்பர்களை மட்டும் சத்யாவின் வீட்டிற்கு அனுப்பி தகராறு செய்ய சொல்லி உள்ளார்.

அதன்படியே நண்பர்களும், சத்யா வீட்டிற்குள் நுழைந்து, வீரபத்திரன், சத்யாவின் அம்மா, வீரபத்திரனின் 2 பிள்ளைகளை கடுமையாக தாக்கி, அங்கிருந்த ரூமில் பூட்டிவிட்டனர். பிறகு, வீட்டிலிருந்த 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்க பணத்துடன் காரில் தப்பி சென்றுவிட்டார்கள்.. அதாவது, சத்யாவை தவிர அனைவரையுமே அந்த கும்பல் தாக்கி சென்றுள்ளது..

விசாரணை: இதையடுத்து, வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்தனர். அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்தனர்.

அப்போதுதான் சுரேஷ் வந்த கார் சென்ற திசையை கண்டறிந்து, காரின் ஓனர் யார் என்ற அட்ரஸை கண்டுபிடித்தனர்.. அந்த காரின் முகவரியை வைத்து, சுரேஷை போலீசார் கைது செய்தனர். ஆனால் அதற்குள், கொள்ளையடித்த 15 சவரன் நகைகளையும் நாகப்பட்டினத்தில் ஒரு நகைக்கடையில் அடகு வைத்துவிட்டனர்.. இப்போது சுரேஷின் நண்பர் ஜாபர் மட்டும் தலைமறைவாக உள்ள நிலையில், மற்ற 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+