அக்கா பொண்ணு.. அதுவும் சின்ன பொண்ணு.. கேஷூவலா டீ குடித்து அதிரவைத்த தாய்மாமன்.. திகைத்த திருப்பத்தூர்
திருப்பத்தூர்: தாய்மாமன் செய்த காரியத்தை பார்த்து, திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியே மிரண்டுபோய் கிடக்கிறது.. என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - ஜெயப்பிரதா தம்பதியினர். இவர்களது மகள் ஜீவிதா.. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஆர்ட்ஸ் காலேஜில் முதல் வருடம் படித்து வருகிறார். 18 வயதாகிறது.

ஜெயப்பிரதாவின் தம்பி பெயர் சரண்ராஜ்.. சின்னகாசிநாயக்கன் பட்டியில் வசித்து வருகிறார்.. ஆட்டோ டிரைவராகவும் போட்டோகிராபராகவும் உள்ளார். இப்போது 35 வயதாகிறது.. இவர் தன்னுடைய அக்கா ஜெயப்பிரதா மகளை காதலித்துள்ளார்.. அதாவது தன்னைவிட 17 வயது குறைந்த ஜீவிதாவை விரும்பியுள்ளார்.
தாய்மாமன்: தன் அக்காவிடம், ஜீவிதாவை பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரதா, திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை..
சொந்த தம்பியாக இருந்தாலும், தன் மகளைவிட, 17 வயது அதிகம் என்று நினைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே ஒரு கொலை கேஸில் சரண்ராஜூக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது. அதனால், இந்த திருமணத்துக்கு சம்மதிக்க முடியாது என்று சரண்ராஜிடம் உறுதியாக சொல்லிவிட்டார் ஜெயப்பிரதா. ஆனாலும், கல்யாணம் செய்துதர வேண்டும் என்று அடிக்கடி அக்காவை தொல்லை தந்து வந்திருக்கிறார் சரண்ராஜ்.
அதுமட்டுமல்ல, ஜீவிதாவும் சரண்ராஜை விரும்பி வந்த நிலையில், திருமணத்துக்கு அம்மா மறுப்பு சொல்லிவிடவும், சரண்ராஜிடம் பேசுவதை ஜீவிதா தவிர்த்துள்ளதாக தெரிகிறது
சரண்ராஜ்: இந்நிலையில், சம்பவத்தன்று கல்லூரி விடுமுறை என்பதால், ஜீவிதா வீட்டில் இருந்துள்ளார்.. அவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர்... ஜீவிதா மட்டும் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட சரண்ராஜ், வீட்டிற்கு சென்று, தனியாக பேச வேண்டும் என்று சொல்லி வெளியே அழைத்து வந்திருக்கிறார். அப்போது, தன்னுடைய காதலை மீண்டும் ஏற்கும்படியும், கல்யாணம் திருமணம் செய்துகொள்ளும்படியும் சரண்ராஜ் மிரட்டியிருக்கிறார்.. ஆனால், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என ஜீவிதா கறாராக சொல்லிவிட்டார்.
இந்த ஒரு வாரமாகவே, ஜீவிதா செல்லும் இடங்களுக்கெல்லாம், பின்னாடியே சரண்ராஜும் சென்றிருக்கிறார்.. அப்போதுகூட, ஜீவிதா அவரிடம் பேசவில்லை என்பதால், சரண்ராஜுக்கு கோபம் அதிகரித்தள்ளது.
இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் ஜீவிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த சரண் ராஜ், ஜீவிதாவை, அங்கிருக்கும் இன்னொரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியுள்ளது.. இறுதியில், "என்னை கல்யாணம் பண்ணிக்கவில்லையானால் நீ யாரையுமே கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது, செத்து ஒழி என்று சொல்லி, ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
அக்கா மாமா: பிறகு, தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.. சரண்ராஜ் எழுதியிருந்த கடிதத்தில், "அன்புள்ள அக்கா, மாமா, அம்மா, அப்பாவுக்கு சரண்ராஜ் எழுதுவது... நானும் ஜீவிதாவும் 4 வருடங்களாக காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டோம். ஆனால், முடியவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள். இப்படிக்கு சரண் ராஜ் -ஜீவிதா" என்று கையெழுத்து போட்டிருந்தார்.
இதற்கு பிறகு போலீசார் ஜீவிதாவின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இது தொடர்பான வழக்கையும் பதிவு செய்து, தனிப்படையும் அமைத்து, தப்பி ஓடிய சரண்ராஜை தேடினர்..
அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. இறுதியில், நத்தம் பகுதியில் பதுங்கியிருந்தபோது அவரை கைது செய்தனர்.. தற்போது அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
ஜீவிதாவை 4 வருடமாக ஒருதலையாய் காதலித்து வந்திருக்கிறார்.. அதாவது, ஜீவிதாவுக்கு 14 வயதாகும்போதே, இந்த ஒருதலைக்காதல் முளைத்துள்ளது.
கடிதம்: நாங்கள் இருவருமே தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று கடிதம் எழுதிய சரண்ராஜ், தன்னுடைய செல்போனை அங்கேயே வீசிவிட்டு, ஜீவிதாவின் செல்போனை மட்டும் கையோடு எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
ஆனால், கடிதத்தில் எழுதியபடி, அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லையாம்.. போலீசார் சரண்ராஜை தேடியலைந்தபோது, ஒரு டீக்கடையில், எந்தவித டென்ஷனும் இல்லாமல் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தாராம்...!!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications