Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பத்தூர் ஸ்பா-வில் விபச்சாரம்.. டி.எஸ்.பி திடீர் ரெய்டு! மொட்டை மாடியில் இருந்து விழுந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: ஸ்பா சென்டர்கள் என்ற பெயரில் சிலர் பாலியல் தொழில்கள் செய்து வருவதும் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக புகார்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக மிகுந்த பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தமிழகத்தில் குற்றச்செயல்கள் எங்கு நடந்தாலும், யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறார்.. இதையடுத்து, தமிழக போலீஸார் விழிப்புடன் செயல்பட்டு, குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

tirupathur spa center tirupattur

முக்கியமாக, போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாரகள்.. வருகிறது. அதேபோல, தமிழகத்தின் பல இடங்களில் சட்டவிரோதமாக நடத்தப்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

புகார்கள்: அதுமட்டுமல்ல, தமிழகத்தின் சில சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்ததால், அனுமதியின்றி நடத்தப்படும் அந்த மசாஜ் சென்டர்களில் போலீசார் திடீர் சோதனை நடத்துவதுடன், பாலியல் தொழில் நடப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்களை தயவுதாட்சண்யம் பார்க்காமல் கைது செய்து வருகின்றனர்.

tirupathur spa center tirupattur

அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருப்பத்தூர், ஹவுசிங் போர்டு காந்தி சிலை எதிரே ஒரு ஸ்பா செயல்பட்டு வருகிறது.. இந்த ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்த தகவலின் பெயரில் டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், சோதனை நடத்துவதற்காக, அந்த ஸ்பாவுக்குள் திடீரென நுழைந்தனர்.

மொட்டை மாடி: வழக்கமாக ரெய்டு என்றாலே போலீஸாரை பார்த்ததுமே, சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடக்கூடும்.. அந்தவகையில், ஸ்பா கட்டிடத்தின் மொட்டை மாடியில், யாராவது ஒளிந்து கொண்டிருப்பார்களோ? என்று சந்தேகப்பட்டு, ஜெகன் (32) என்ற போலீஸ்காரர் அவசர அவசரமாக மொட்டை மாடிக்கு ஏறியிருக்கிறார்.

tirupathur spa center tirupattur

மொட்டை மாடி: மொட்டைமாடியிலிருந்து படிகட்டு உள்ள பகுதிக்கு சென்றபோது, அங்கு சமமான தரை இருக்கும் என்று எண்ணி கால் வைத்ருக்கிறார்.. ஆனால், எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துவிட்டார் ஜெகன்.. இதனால் வலி தாங்க முடியாமல் ஜெகன் அலறி துடித்தார்.. அவரது அலறலை கேட்டு, ஸ்பாவுக்குள் ரெயிடு நடத்தி கொண்டிருந்த போலீசார் பதறிப்போய், ரெய்டு நடத்துவதை அப்படியே விட்டுவிட்டு, மாடிக்கு ஓடினார்கள்..

தீவிர சிகிச்சை: அங்கே வலியால் துடித்து கொண்டிருந்த ஜெகனை மீட்டு, டி.எஸ்.பி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.. அங்கு ஜெகனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை தரப்பட்டது.. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் 10 தையல் போடப்பட்டுள்ளன.. கை, கால்களிலும் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

tirupathur spa center tirupattur

இதனால் ரெயிடுக்கு வந்த போலீஸ்காரர்கள் அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குவிந்திருக்க, இதையே சாக்காக பயன்படுத்தி கொண்ட ஸ்பா சென்டரின்‌ ஏஜென்ட் மற்றும் அங்கிருந்த பெண்கள் அனைவருமே ஸ்பா சென்டரை மூடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்களாம். எனவே இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

பாலியல் தொழில்: கடந்த 2 மாதத்துக்கு முன்புகூட, திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே தூய நெஞ்ச கல்லூரி எதிரே உள்ள ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் செய்து செய்த தமிழ்ச்செல்வன் (30) என்ற புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.. மேலும், 40 வயது மற்றும் 24 வயது வெளிநாட்டு பெண்களையும் ஸ்பாலிருந்து மீட்டு, அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

"சட்டவிரோதமாக ஸ்பா என்கிற பெயரில் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள், உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ரெய்டு நடந்துள்ளது,

பரபரப்பு: ஆனால், மொட்டை மாடிக்கு, சந்தேகத்தின்பேரில் போலீஸ்காரர் ஜெகன் ஓடினாரா? அல்லது யாராவது தப்பி மொட்டை மாடிக்கு ஓடுவதை பார்த்தாரா? என்று தெரியவில்லை. இந்த ரெயிடு விவகாரம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+