திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் திருதிருனு விழித்த பெண்.. மீண்டும் வளையத்தில் பேண்டா, மிரண்டா சுகுமார்
திருப்பத்தூர்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.. அத்துடன், ஸ்கேன் சென்டர்களையும் இழுத்து மூடி சீல் வைத்து வருகின்றனர்.. அந்தவகையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த திருப்பத்தூர் ஸ்கேன் சென்டர் சுகுமாரை காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்..
சாமி நகரை சேர்ந்தவர் சுகுமார்.. இவருக்கு தற்போது 55 வயதாகிறது.. இவர் சட்டவிரோதமாக கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிந்து, பல லட்சம் பணம் சம்பாதித்து சொத்துக்களை குவித்தவர்..

டாக்டர் சுகுமார் யார்
சுகுமார் பிஎஸ்சி படித்துள்ளார்.. ஸ்கேன் பற்றிய டிப்ளமோவும் படித்துள்ளார்.. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டர் எதிரே சொந்தமாக ஸ்கேன் சென்டர் திறந்தார்.. ஆனால் அதில் போதுமான வருமானம் வரவில்லை என்பதால், திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலுள்ள ஸ்கேன் சென்டர்களில் வேலைக்கு சேர்ந்தார்.
அங்கு வரும் கர்ப்பிணிகளிடம் நைசாக பேச்சு கொடுத்து கருவில் இருக்கும் குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பது பற்றி தன்னால் தெரிவிக்கமுடியும் என்றார்.. இப்படித்தான் பல கஸ்டமர்களை சேர்த்தார் சுகுமார்.. அத்துடன், கருவில் உள்ள பெண் குழந்தையை வேண்டாம் என கருதுவோருக்கு, அதனை அழிக்கும் செயலிலும் ஈடுபட்டார்.
வாடகை வீட்டில் ஸ்கேன் சென்டர்
இதற்காகவே வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் திறந்தார். இதுபற்றிய அப்போது தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் சுகுமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.. அத்துடன், அவரது ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்துவிட்டனர்.. ஆனால் ஜெயிலிலிருந்து வெளியே வந்த சுகுமார் மீண்டும் இந்த செயலில் ஈடுபட்டார். இப்படி 4 முறை கைதானார்.
மீண்டும் வெளியே வந்த சுகுமார், தன்னுடைய தொழிலை சற்று விரிவுபடுத்தினார்.. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புரோக்கர்களை நியமித்தார். அவர்கள் மூலம் கர்ப்பிணிகளை திருப்பத்தூருக்கு வரவழைத்தார்...
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள் தங்களிடம் வரும் பெண்களை ஸ்கேன் எடுக்க சுகுமாரிடம் அனுப்பி வைத்து, அதற்குரிய கமிஷனையும் பெற்றனர்..
கதிரம்பட்டி மகிமை காரன் தோட்டம்
திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி மகிமை காரன் தோட்டம் என்கிற காட்டுப்பகுதியில் ஒரு குடிசையில் ஸ்கேன் செய்யும் மிஷின்களை வைத்து, ஸ்கேன் சென்டரை நிறுவினார் சுகுமார்.. கருவிலுள்ளது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்ல, மிரண்டா, பேண்டா போன்ற ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார். அதாவது பேண்டா என்றால் பெண் குழந்தை, மிரண்டா என்றால் ஆண் குழந்தையாம். எத்தனையோ பெண்கள், தங்கள் கருவிலுள்ள பெண் குழந்தைகளை அழிக்க முன்வந்தனர்.
திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டு
திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இவரிடம் ஸ்கேன் எடுக்க பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். கருவை கண்டறிய ரூ.10,000 முதல் 15,000 வரை வசூலித்தார் சுகுமார்.. இதனால் ஒருநாளைக்கு ரூ.2 லட்சம் வரை பணம் கொடியது.. வெளி மாவட்டங்களில் இருந்து திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் கர்ப்பிணிகளை, ரகசிய இடத்திதிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வர புரோக்கர்களை நியமித்தார்..
2 வருடங்களுக்கு முன்பு, ஒரு குடிசை வீட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸ்கேன் எடுத்துக்கொண்டிருந்தார் சுகுமார்.. அப்போதுதான் மேற்கண்ட தகவல்களை அறிந்த போலீசார், குடிசைக்குள் நுழைந்து, சுகுமார் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.. ஸ்கேன் செய்யும் கருவிகளை பறிமுதல் செய்ததுடன், கருவை கலைக்க குவிந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.
மீண்டும் கைதான சுகுமார்
5 முறைக்கு மேல் கைதானதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகுமார் என்றால் பிரபலம்.. குண்டர் சட்டத்திலும் இவர் கைதாகியிருந்தார்.. சுகுமாரை பற்றின செய்திகள் அப்போது மீடியாவில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது..
இப்போது, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பணத்துக்காக பெண் சிசுக்களை அழித்த டாக்டர் சுகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில் விழித்து நின்றிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள வந்ததாகவும், புரோக்கர்கள் சொன்னதால், திருப்பத்தூருக்கு வந்ததாகவும் சொன்னார்கள்..
டாக்டர் சுகுமார் கைது
இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் யாரந்த புரோக்கர்கள் என்ற விசாரணையை நடத்தினர்.. இறுதியில், ஆளில்லா வீடுகளை ஒருநாள் வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதை புரோக்கர்கள் வாடிக்கையாக கொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
புரோக்கர்கள் 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த டாக்டர் சுகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் சாமநகர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சுகுமாரை கந்திலி போலீசார் கைது செய்துள்ளது, பரபரப்பை தந்து வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications