போதையில் இருந்த தாய் பாலுாட்டியதில் 6 மாத பெண் குழந்தை பலி - திருப்பூரில் பரிதாபம்
திருப்பூர்: திருப்பூரில் மது போதையில் இருந்த தாய் பாலூட்டியதில், ஆறு மாத பெண் குழந்தைப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி சேதுபதி என்பவரின் மனைவி இந்திரா. இவர்களுக்கு குழந்தைகள் தனலட்சுமி(5), குணசேகரன்(3) மற்றும் ஸ்ரீதேவி என்ற ஆறு மாத பெண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள்.
இந்நிலையில், நேற்று மாலை திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் பகுதியில் மது போதையில் இருந்த இந்திரா, ஸ்ரீதேவிக்கு தாய்ப்பால் ஊட்டியதாகத் தெரிகிறது. அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அக்குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு, குழந்தையின் சடலத்துடன் அங்கிருந்து வெளியேறியவர் அவசர சிகிச்சை பிரிவு முன் தரையில் அமர்ந்து, மற்ற குழந்தைகளுடன் அழுது புரண்டுள்ளார்.
பின்னர், அங்கிருந்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். மேலும், குழந்தையின் தந்தை சேதுபதியை அழைத்துவர திருப்பூர் தெற்கு போலீசார் ஏற்பாடுகளை செய்தனர்.
குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம், போதையில் தாய்ப்பால் அளிக்கப் பட்டது தானா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே உறுதியாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications