For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடுப்புக்கு கீழே துப்பாக்கி சூடு, மேல இரும்பு ராடு... ஒரு வழக்கறிஞரின் அதிரடி ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் - மார்க்சிஸ்ட் கனகராஜ்

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து நெல்லை வழக்கறிஞர்கள் குழு நேரடி பேட்டிகள் எடுத்து முகநூல் வழியாக வெளி உலகுக்குக் கொண்டு வந்து கொடுத்து வருகிறது. நெல்லை வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி தொடர்ந்து இதுகுறித்த விரிவான தகவல்களை வீடியோவுடன் வெளி உலகுக்குக் கொண்டு வந்து கொடுத்து வருகிறார்.

    தூத்துக்குடியில் போலீஸாரின் தாக்குதலுக்குள்ளானவர்கள் குறித்த முழுமையான செய்திகளை ஊடகங்களால் தர முடியாத நிலையே நிலவுகிறது. காரணம் பல்வறு கட்டுப்பாடுகள், தடுப்புகள், மிரட்டல்கள், நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள். இதனால் அங்கிருந்து வரும் வீடியோக்கள், அங்குள்ளவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டுதான் வெளியுலகுக்கு செய்திகள் வந்து கொண்டுள்ளன.

    தூத்துக்குடி நிலவரத்தைப் பொறுத்தவரை செய்தி ஊடகங்களை விட சமூக வலைதள ஊடகங்கள்தான் பெரும் பங்காற்றி வருகின்றன. ஒவ்வொருவரும் பகிரும் வீடியோக்கள்தான் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக உள்ளது. அந்த வகையில் வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கியின் முகநூல் பக்கங்களில் தூத்துக்குடியின் உண்மை நிலவர வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. அயராமல் தொடர்ந்து கள நிலவரங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் வள்ளிநாயகம் சுட்கி. அவற்றிலிருந்து சில நமது வாசகர்களுக்கு:

    போலீஸார் தாக்கியது எப்படி

    போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் அவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய காணொளி இது.

    பெண்களைத் தொட்டதால் ஆண்கள் கோபம்

    மோதலுக்குக் காரணம் போலீஸ்தான் என்று கூறுகிறார் பாதிக்கப்பட்ட இவர். அமைதியாக நடந்த போராட்டத்தின்போது போலீஸார் பெண்களை தள்ளி விட்டதாலும், பெண்களின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியதாலும் ஆண்கள் கோபமடைந்ததால் மோதல் ஏற்பட்டதாக இவர் கூறுகிறார்.

    வக்கீல்கள் துணை நிற்போம்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களுக்கு வக்கீல்கள் துணை நிற்போம்.

    எதிரி கொடுத்த உதவியில்

    யாருக்கு எதிராக போராடினோர்களோ, அவர்கள் கொடுத்த நன்கொடைக் கட்டில்களில்தான் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது எத்தனை வேதனையானது.

    உதவாமல் போன மீடியா

    நண்பனைக் கொன்றதைத் தட்டிக் கேட்டதற்காக இரும்புத் தடியால் தாக்கப்பட்டவர் இவர். உதவி கோரி ஒரு மீடியாக்காரரை நாடியபோது அவர் உதவாமல் போனதை எத்தனை வெள்ளந்தியாக கூறுகிறார் பாருங்கள். உதவாமல் போனதற்காக அந்த மீடியாக்காரர் வெட்கப்பட வேண்டும்!

    சலூன் கடைக்காரரின் பரிதாபத்தைப் பாருங்கள்

    400 ரூபாய் சம்பளத்துக்கு சலூன் கடையில வேலை பார்க்கிறார் இவர். வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. இவரது கதையைப் பாருங்கள்.

    நாங்க இளிச்சவாயங்க சார்

    அடிக்காதீங்க சார்னு சொல்லியிருக்காரே தவிர உங்ல திருப்பி அடிக்கல சார், ஏன்னா நாங்க இளிச்சவாயங்க சார்.

    அடிமைகளா நாங்க

    இப்பெண்மணி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உரியவர்கள் பதிலளிக்க வேண்டும்.

    தூத்துக்குடி கள நிலவரங்களை தொடர்ந்து இடை விடாமல் மக்களுக்கு அளித்து வரும் வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி மற்றும் வக்கீல்கள் குழுவுக்கு பெரிய சல்யூட்!

    வீடியோ - தகவல் நன்றி: https://www.facebook.com/vallinayagam.valli.16

    English summary
    Tiruvelveli advocate Vallinayakgam has exposed the police excess in Tuticorin through his field videos which are posted in his FB page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X