திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் - டிகேஎஸ் இளங்கோவன்
வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை சென்ற வைகோவிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வைகோ வாகனம் மீது கற்கள் வீசி தாக்கினர். தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, செருப்பை எடுத்து காட்டினர்.
இது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வைகோ மிகுந்த வருத்தத்துடன் தனது வாகனத்தில் ஏறிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார். தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டதால் வைகோ திரும்பிச்செல்ல நேரிட்டது.

திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை சந்தித்துள்ளனர். பொருளாளர் ஸ்டாலின் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெறும் யாரையும் பார்க்க தடையில்லை என்பதை கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். வைகோவை ஏன் அழைத்து செல்லவில்லை என எங்களிடம் ஸ்டாலின் கேட்டார்.
வைகோ மருத்துவமனை வருவது முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. வைகோவை அழைத்துச் செல்ல காத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications