டிராபிக் ராமசாமி மட்டுமல்ல.. பால் கனகராஜும் போட்டியிடப் போகிறாராம்.. ஆர்.கே.நகரில்!
சென்னை: தமிழ் மாநிலக் கட்சியின் தலைவராக இருக்கும் பால் கனகராஜ், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரான செங்குட்டுவன் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவராக இருந்தவர் பால் கனகராஜ். இவரும் இப்போது அரசியல்வாதியாக இருக்கிறார். அதாவது தமிழ் மாநிலக் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது கட்சி தற்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தில் குதிக்கிறது.

இதுகுறித்து தமிழ் மாநில கட்சி பொதுச்செயலாளர் எல்.செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் மாநில கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை கூட்டம் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் வேப்பேரியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் மாநில கட்சி போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஜனநாயகத்தின் மாண்பை காப்பாற்றவும், நீதியை நிலைநாட்டவும், இலவசங்கள் வழங்குவதை அறவே ஒழித்திடவும், ஆர்.சி.பால்கனகராஜை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது என்றும் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications