தெலுங்கு நடிகர் சோபன்பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்.. கி.வீரலட்சுமி கைது
சென்னை: சென்னை: சோபன்பாபு சிலையை அகற்றக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் சிலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் சிலையை அகற்றியதைக் கண்டித்தும், மீண்டும் அந்த சிலையை நிறுவ வலியுறுத்தியும், சென்னையில் உள்ள தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறும் என்று தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி அறிவித்திருந்தார்.

போராட்ட அறிவிப்பையொட்டி சென்னை மேத்தா நகர் நெல்சன் சாலையில்யில் உள்ள சோபன் பாபுவின் சிலை அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலை அவரது குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளது, தெருக்களின் சந்திப்பில் சிலை இருந்தாலும் சிலை இருக்கும் இடம் சோபன்பாபு குடும்பத்தாரின் சொந்த இடம், ஆனால் சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தின் பகுதி பொதுமக்களின் நடை பாதையினை ஆக்கிரமித்து நீட்டிக்கொண்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சோபன்பாபுவின் சிலையின் பீடம் பொது இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டதாக கடந்த 2012ஆம் ஆண்டு நாளிதழ்களில் செய்தி வெளியானது. நடிகர் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை நீக்கலாம் என்று முடிவெடுத்தது போல பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சோபன்பாபு சிலையின் பீடத்தை அகற்றுமா அரசு என்று கேள்வி எழுந்தது. அதனையடுத்து சிவாஜி சிலையை அகற்றும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபாகரன் சிலையை அகற்றியதைக் கண்டித்து சென்னையில் உள்ள சோபன்பாபுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டத்தை தொடங்கியுள்ளனர் தமிழ் அமைப்பினர். இதனால் சிலை முன்னர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications