தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜன. 23-ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது!!
தமிழக சட்டசபை வரும் 23-ந் தேதி கூடுகிறது. முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடர் இது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 23-ந் தேதி ஆளுநர் வித்யாசகர் ராவ் உரையுடன் தொடங்க உள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா திடீரென முதல்வராக முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனால் நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் எப்போது கூடும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் வரும் 23-ந் தேதி சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றுவார்.
ஆளுநர் உரையில் அதிமுக அரசின் நலத் திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில நாட்கள் சட்டசபையில் விவாதம் நடைபெறும்.
வரலாறு காணாத வறட்சி, விவசாயிகள் தற்கொலை விவகாரம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications