ஆளுநராக தமிழிசையை நியமித்து தமிழக பாஜகவுக்கு பெருமை சேர்த்த அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

    சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து தமிழக பாஜகவுக்கு பெருமை தேடி கொடுத்திருக்கிறார் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா.

    தமிழகத்தில் பாஜகவின் இருப்பை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கட்சி என்கிற முகத்தை மாற்றியவர் தமிழிசை.

    காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த போதும் இந்துத்துவா கொள்கையில் படுதீவிரமாக செயல்பட்டவர் தமிழிசை சவுந்தரராஜன். எத்தனையோ ஏகடியங்கள், மீம்ஸ்கள் போட்டு கலாய்த்த போதும் அதற்கு பதிலடி கொடுத்தவர் தமிழிசை.

    இடைவிடாது முழக்கம்

    இடைவிடாது முழக்கம்

    தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நியமித்து அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகாலமாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என இடைவிடாது முழங்கியவர்.

    ஆச்சரியப்படுத்திய பாஜக மேலிடம்

    ஆச்சரியப்படுத்திய பாஜக மேலிடம்

    பொதுவாக ஆளுநர் பதவி என்பது முதியவர்களுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவியை கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது பாஜக மேலிடம்.

    பாஜக தலைவருக்கு பதவி

    பாஜக தலைவருக்கு பதவி

    தமிழகத்தில் பாஜக தலைவர்களாக பலரும் இருந்துள்ளனர். இல.கணேசன் போன்றவர்களுக்கு அதிகபட்சம் ராஜ்யசபா எம்.பி. பதவிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போதுதான் முதல் முறையாக தமிழக பாஜக தலைவர் பதவி வகித்த ஒருவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

    சண்முகநாதன், சதாசிவம்

    சண்முகநாதன், சதாசிவம்

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சண்முகநாதனுக்கு முன்னர் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் பாலியல் புகாரில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் ஓய்வுக்குப் பின்னர் கேரளா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநராக நியமித்திருப்பதன் மூலம் தமிழக பாஜகவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் அமித்ஷா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+