தமிழ் கலாச்சாரத்தை மதிக்காத பாஜக.. கட்சியை தூக்கி எறிந்த பெண் நிர்வாகி!
திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமா கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமா கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வுடன் தொடர்புடையது. அதை தடை செய்வதில் நியாயம் இல்லை. தமிழர்களின் உணர்வையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளாத பாஜகவில் இருந்து நான் விலகுகிறேன்.
என் கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications