2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி பாஜகவைத் தான் ஆதரிப்பார்... துண்டு போடும் தமிழிசை!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி பாஜகவுடன் தான் சேர்வார் என்று தான் கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் தான் இணைவார், ஏனெனில் ஊழலற்ற நிர்வாகம் என்று அது பாஜக மட்டுமே தருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது நல்ல முடிவு, ஊழலை அகற்ற பல கரங்கள் தேவைப்படுகிறது, அதில் ரஜினியின் கரமும் இருப்பது மகிழ்ச்சி என்று தமிழிசை கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது :

ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்கானத் தான் 1996ல் ஊழல் மலிந்திருந்த உடனேயே தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது வாய்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னார். இப்போதைய அரசியல் சூழலில் சமீப காலமாக ஆர்கே நகர் போன்ற தேர்தல்களை பார்க்கும் போது தமிழகத்தில் ஊழலை எதிர்த்து போட்டியிட பல கரங்கள் தேவைப்படுகிறது. பலம் இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது.

இதனால் ஊழலற்ற நிர்வாகத்தை வரவேற்கும் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். என்னைப் பொருத்தவரை மோடி ஊழலில் புரையோடிய நிர்வாகத்தை ஊழலற்ற நிர்வாகமாக மாற்றி இருக்கிறார்.

வரவேற்கிறேன்

வரவேற்கிறேன்

எங்களின் முயற்சி தாமதமடைந்தாலும் நிச்சயம் வெற்றி பெறும். ரஜினி ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வரத் தான் அரசியலுக்கு வருகிறேன், இந்த காலகட்டத்தில் அரசியலுக்கு வராவிட்டால் எனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்.

களங்கம் இல்லாத அரசியல்

களங்கம் இல்லாத அரசியல்

எப்படி ஒரு அரசியல் கட்சியாக தன்னுடைய கொள்கைளை நிர்வகிக்கிறார் என்று எப்படி அவர் அரசியலில் பரிணமிக்கிறார் என்பதை பார்த்து தான் அடுத்தது சொல்ல முடியும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொல்லி இருக்கிறார், களங்கம் இல்லாத அரசியல் களத்தை கொண்டுவருவேன் என்று அவர் சொல்லி இருப்பதை வரவேற்கிறேன்.

ஊழலை ஒழிக்க பாஜகவால் தான் முடியும்

ஊழலை ஒழிக்க பாஜகவால் தான் முடியும்

கட்சிக்கு உள்ளே இருக்கும் குழப்பங்கள் ஆட்சியில் பிரதிபலிக்கக் கூடாது என்பதைத் தான் சொல்லி வருகிறோம். கட்சி குழப்பம் ஆட்சியில் விருவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் பல திட்டங்கள், மாநில அரசு குழப்பம் இல்லாமல் இருந்தால் தான் எடுத்துச் செல்ல முடியும். அதைத் தான் ரஜினி சொல்லி இருக்கிறார், ஊழல் ஒழிக்க முடியும் என்று தான் பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

தமிழிசை கணிப்பு

தமிழிசை கணிப்பு

ரஜினி அரசியலால் யாருக்கும் பின்னடைவு இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்கிறேன் என்று ரஜினி சொன்னால் அவர் நிச்சயம் மோடியால் தான் தர முடியும். இதனால் அவர் பாஜகவுடன் தான் சேர்வார் என்பது என்னுடைய கணிப்பு என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+