தமிழக பட்ஜெட்... ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசனை!
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17-ந் தேதி கவர்னர் ரோசையாஉரையோடு தொடங்கியது. பின்னர், அந்த சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த மாதம் 6-ந் தேதி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் 2015-2016-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாதம் இறுதியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை 3 மணியளாவில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 40 நிமிடங்கள் நடந்த அந்தக் கூட்டத்தில், நடப்பாண்டு பட்ஜெட் பற்றி ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications