ஜெயலலிதா மறைவுக்கு பிறகு..முதல் முறையாக இன்று பன்னீர்செல்வம் தலைமையில் கேபினட் கூட்டம்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது.
சென்னை: ஜெயலலிதா உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளி்த்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. மேலும் காவிரி மற்றும் அரசின் நிர்வாக செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications