For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தூரில் 2 தீவிரவாதிகளை பிடித்த போலீசாருக்கு பதவி உயர்வு- ரூ. 5 லட்சம் பரிசு: ஜெ.

By Mathi
Google Oneindia Tamil News

TN Chief Minister J Jayalalithaa Announces Cash Award to Cop
சென்னை: ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்த 20 போலீசாருக்கும் பதவி உயர்வும் ரூ5 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் புத்தூரில் கடந்த சனிக்கிழமையன்று 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீவிரவாதிகள் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், புத்தூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை உயிரை துச்சமெனக் கருதி பிடித்த 20 போலீசாரும் பாராட்டுக்குரியவர்கள். 20 போலீசாருக்கும் தலா ரூ5 லட்சம் பரிசு வழங்கப்படும். அத்துடன் அவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

English summary
A cash award reward of Rs 5 lakh to each for the all of Puthur Operation was announced by Tamilnadu Chief Minister J Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X