திருச்செந்தூர் கோவிலில் எல்லை மீறும் வசூல் வேட்டை.. முதல்வர் விஜய்க்கு பாஜக வைத்த கோரிக்கை
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சாமானிய பக்தர்கள் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் வதங்கும் நிலை இருக்கிறது. இவற்றுடன் அர்ச்சகர்களின் அதீத கட்டண வசூலும், ஊழியர்களின் மனிதாபிமானமற்ற, அநாகரிகமான பொது மக்கள் அணுகுமுறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி சில நபர்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் பணம் வாங்கிக்கொண்டு சிலரை மட்டும் சண்முக விலாச மண்டப இரும்பு கேட் வழியாக அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நேற்று பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த பக்தர்கள் அங்கிருந்த இரும்பு கேட்டை பலவந்தமாக தள்ளிவிட்டு உள்ளே நுழைந்ததால் கோவிலில் பெரும் தள்ளுமுள்ளுவும் பரபரப்பும் ஏற்பட்டது.

இது ஒருபுறம் எனில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் தனது மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த கோவில் ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை வெளியே தள்ளி, முகத்திற்கு நேரே கேட்டைப் பூட்டினார்களாம். இதனால் அந்த தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினர் கூறுகையில், "திருச்செந்தூர் கோவிலில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் இந்த வி.ஐ.பி. கலாசாரம் மற்றும் கட்டணக் கொள்ளை போன்ற அவலப் பிரச்சினைகளுக்குத் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை எளிய மக்களும், பெண்களும் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும்" என வேண்டுகோள் வைத்தனர்.
இதனிடையே பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "வசூல் மயமாகிறதா திருச்செந்தூர்? அமைச்சர் இல்லா துறையில் அரங்கேறும் அட்டூழியங்கள்.. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது. மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் வருகை தரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி சில நபர்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் ஆசை வார்த்தைகளில் சிக்கும் பக்தர்கள் ஒரு நபருக்கு 500 முதல் 1000 வரை கொடுத்து ஏமாந்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை கோவில் நிர்வாகம் அறியவில்லையா அல்லது அறிந்தும் கமிஷன் போய்விடும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.
இதுவரை இந்து சமய அறநிலையத் துறைக்கென்று அமைச்சரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக முதல்வர் விஜய் அவர்களே, விரைவில் துறை அமைச்சரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத் துறையில் கோவில்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுத்து பக்தர்கள் மன நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
இனி காத்திருக்கவே வேண்டாம்.. அனைத்து கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட்.. அறநிலையத்துறை அதிரடி திட்டம்!












Click it and Unblock the Notifications