ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனராக 'டம்மி பதவிக்கு' தூக்கி அடிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் சுங்கத்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் அற்ற ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மோகன் வர்கீஸ் சுங்கத் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் என்ற புதிய பதவியில் அமர்த்தப்பட்டார்.

TN chief secretary Chunkath shunted out

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மோகன் வர்கீஸ் தலைமைச் செயலராக இருந்தாலும் நடைமுறையில் அதாவது அதிமுகவினர் பாணியில் மக்கள் தலைமைச் செயலராக இருப்பவர் ஷுலா பாலகிருஷ்ணன்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியமளித்தவரும் இதே ஷீலா பாலகிருஷ்ணன்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது அடுத்த முதல்வர் யார் என்ற பட்டியலில் இடம்பிடித்திருந்ததும் ஷீலா பாலகிருஷ்ணன். இவ்வளவு செல்வாக்கான ஷீலா பாலகிருஷ்ணனுடனான பனிப்போரின் உச்சமாகத்தான் முக்கியத்துவமே இல்லாத டம்மி போஸ்ட்டான ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநராக தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார் மோகன் வர்கீஸ் சுங்கத் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகன், ஷீலாபாலகிருஷ்ணனை எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசு வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+