"உதான்"பயிற்சித் திட்ட தொடர்பு மையங்களை அதிகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை!
சென்னை: ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் "உதான்" பயிற்சித் திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்ப காலத்தை ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய கடித விவரம்:
திறமைமிக்க மாணவிகள் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங் கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத 'உதான்' என்ற புதிய திட்டத்தை 'சி.பி.எஸ்.இ.' அறிவித்துள்ளதை அறிவேன்.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கல்வி வாரியங்களில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என். ஐ.டி.க்களில் சேர சிறப்பு ஆன்லைன் மூலம் நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்கான விண்ணப்ப படிவம் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள தொடர்பு மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 நகரங்களில் மட்டுமே அந்த மையங்கள் உள்ளன. கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
இங்கு இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் அதிக அளவில் தகுதிபெற வாய்ப்புகள் உள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள 151 தொடர்பு மையங்களில் தமிழ்நாட்டுக்கு 2 மட் டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு பல மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக அளவில் மாணவிகளை கொண்ட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு 2 மையங்கள் மட்டும் போதுமானது அல்ல. மேலும் தொடர்பு மையங்களுக்கு செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய அச்சம் நிலவுவதால் தகுதியான மாணவிகள் பங்கேற்பது குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தமிழ்நாட்டில் சென்னை மிகப்பெரிய நகரமாகும். மெட்ரோ பாலிடன் நகரமான அது தொடர்பு மைய பட்டியலில் இடம் பெறவில்லை. தகுதியான மாணவிகள் பலர் பங்கேற்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களிலும் தொடர்பு மையங்கள் அமைக்க வேண்டும்.
எனவே உதான் திட்டத்தில் மாணவிகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் தமிழ்நாட்டில் சென்னையை சேர்த்து அதிக இடங்களில் தொடர்பு மையம் அமைக்க வேண்டும். மேலும் அதிக அளவில் மாணவிகள் சேரும் வகையில் அதற்கான விண்ணப்பம் செய்ய காலத்தை வருகிற நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications