முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவார் சொல்கிறார் சரத்குமார்

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர் சரத்குமார் குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்காசி தொகுதிக்குள் நான் வரவில்லை என்று எதிர்கட்சிகள் பேசுகின்றனர். மக்கள் பணிகள் தொய்வின்றி இங்கு நடந்து வருகிறது. கட்சி மாநாடு, சினிமா நூற்றாண்டு விழா, சகோதரர் ராமசந்திர ஆதித்தன் இறப்பு போன்ற காரணங்களால் வரமுடியவில்லை.
தென்காசியில் மேம்பாலம் திறப்பு தள்ளி போய் உள்ளது. விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார். 23ம் தேதி சட்டமன்றம் கூட உள்ளது. இதனால் நவம்பர் 5ம் தேதிக்குள் இந்த மேம்பாலத்தை வீடியோ கான்பிரான்ஸ் மூலம் திறந்து வைப்பார் என்று நம்புகிறேன். குற்றாலத்தை மெடிக்கல் டூரிசம் பகுதியாக மாற்ற மத்திய அமைச்சரை சந்தித்தேன்.
2010ம் ஆண்டு சமக மாநாட்டில் உலக வங்கியில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க தீர்மானம் போட்டோம். இப்போது இவர்கள் புதையலை தேடுகிறார்கள். அந்த கருப்பு பணத்தை மீட்டாலே எல்லாம் தீர்ந்து விடும்.
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நிச்சயம் அதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருவதால் அவர் பிரதமர் ஆவார்.
கல்லூரி முதல்வரை மாணவர்கள் கொலை செய்ததற்கு சினிமா காரணம் என்கிறார்கள். மாணவர்களுக்கு மன அழுத்தம் தான் காரணம். அவர்களுக்கு சரியான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். போட்டி உலகம் என்பதால் மன அழுத்தம் அதிகரித்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் சரத்குமார் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications