இலங்கை வசம் உள்ள 103 படகுகள், 4 மீனவர்ளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் - ஜெ.,
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 4 புதுக்கோட்டை மீனவர்களையும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 103 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி மீன்பிடிக்க சென்றவர்களில் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கடந்த 8ம் தேதி சிறைபிடிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகக் கூறியுள்ள முதலமைச்சர், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை அரசின் போக்கு பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்வதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள 4 புதுகோட்டை மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 103 படகுகளையும் மீட்க பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications