கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - சித்தராமைய்யாவுக்கு ஜெ.,கடிதம்
சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள கலவரங்களில் இருந்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு பெங்களூர் நகரின் பல இடங்களில் கலவரம் வெடித்தது. இன்று காலை முதலே அரங்கேறிய வன்முறை சம்பவங்களால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

ஒரே நேரத்தில் கேபிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட 38 சொகுசு பேருந்துகள் உள்பட 52 ஆம்னி பஸ்களை தீக்கிரையாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இதனால், பெங்களூரு முழுவதும் பதற்ற நிலை உண்டாகியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வருத்தம் அளிப்பதாகவும், தமிழர்களின் உடைமைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications