ஜெ. பதவியேற்பு எப்போது? தலைமைச் செயலகத்தில் ஜரூராக தயாராகிறது முதல்வர் அறை!
சென்னை: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், தலைமை செயலகத்தில் அவருக்கான அலுவலக அறை முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் அமைச்சர்களும் கடந்த மூன்று நாட்களாக கோட்டைக்கு வரவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா உடனடியாக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தபடி அவர் உடனடியாக பதவியேற்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை?
எந்த தேதியில் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் இல்லை. மூத்த அதிமுக தலைவர்கள் சிலர் கூறும்போது, வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கலாம் என்று சூசகமாக கூறப்பட்டாலும், உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ஜெயலலிதா ஏற்கனவே இருந்த முதல்வருக்கான அலுவலக அறை முழுவீச்சில் தயாராகி வருகிறது.

7 மாதமாக பூட்டு
கடந்த ஏழு மாதமாக அந்த அறை பூட்டப்பட்டு கிடந்தது. தற்போது அந்த அறை திறக்கப்பட்டு, மேஜை, நாற்காலி சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் மாடியில் உள்ள முதல்வரின் அறைக்கு செல்வதற்கான லிப்டையும் பாதுகாப்பு அதிகாரிகள் இயக்கி பார்த்து பரிசோதித்து வருகின்றனர்.

லிப்டை கூட பயன்படுத்தவில்லை
தற்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் முதல்வரின் அறை, முதல்வர் பயன்படுத்தும் லிப்ட் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தவில்லை. தற்போது, ஜெயலலிதா விடுதலையாகி, மீண்டும் முதல்வர் ஆக உள்ளதால் பூட்டப்பட்டு கிடந்த அறை மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

காரையும் நிறுத்துவதில்லை
அதேபோன்று, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் பயன்படுத்தி வந்த 1வது நுழைவு வாயில் வழியாக செல்வதும் கிடையாது மற்றும், அவரது காரை 1வது நுழைவு வாயிலின் எதிரே உள்ள போர்ட்டிகோவில் நிறுத்துவதும் கிடையாது.

வெள்ளையடிப்பு
தற்போது முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ள நிலையில், 1வது நுழைவு வாயில் பகுதி, போர்ட்டிகோ மற்றும் முதல்வரின் அலுவலக அறையை சுற்றி வெள்ளையடிக்கும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் ஆப்சென்ட்
ஜெயலலிதா பதவியேற்கும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், முதல்வரின் அலுவலக அறை மற்றும் வெள்ளையடிக்கும் பணிகள் நடப்பதால் ஜெயலலிதா விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானார் என்று கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினத்தில் இருந்து நேற்று வரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட எந்த அமைச்சர்களும் கோட்டைக்கு வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று, அவரது தலைமையின் கீழ் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களே இனி கோட்டைக்கு வந்து பணிகளை கவனிப்பார்கள் என்று தெரிகிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications