போலி ஆவணம் மூலம் கடன் வழங்கிய வழக்கு: இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னை: போலியான ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியன் வங்கி தலைவராக கோபாலகிருஷ்ணன் பதவி வகித்தபோது தனியார் நிறுவனமான கிரண் இன்னோவேஷன் நிறுவனத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்கியது. இந்த கடன் வழங்க முறையான அனுமதியை வங்கி அதிகாரிகள் பெறவில்லை.

இதன்மூலம், இந்தியன் வங்கிக்கு ரூ.5.51 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையிலுள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத் தீர்ப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் வழக்கில் தொடர்புடைய மூன்று வங்கி ஊழியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை மற்றும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதே போல் கடன் பெற்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.32,500 அபராதமும் விதிக்கிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications