இது என்னப்பா... அடுத்தடுத்து தமிழக மாஜி எம்.எல்.ஏ.க்களுக்கு பெரும் ரோதனையான சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Former Vedasandur AIADMK MLA Andivel was found de@d in his farm house | Oneindia Tamil

  சென்னை: தமிழகத்தில் மாஜி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து அகால மரணம் அடைகின்றனர். இன்று கூட முன்னாள் எம்.எல்.ஏ.வின் 2 மனைவிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்திருக்கிறது.

  கிள்ளியூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் சில நாட்களுக்கு திடீரென காலமானார். அவரது மரணம் சர்ச்சையானது.

  ஜான் ஜேக்கப் தற்கொலையா?

  ஜான் ஜேக்கப் தற்கொலையா?

  விஷம் குடித்து ஜான் ஜேக்கப் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் விஷம் இருந்தது எனவும் கூறப்பட்டது.

  ஆண்டிவேல் வெட்டி கொலை

  ஆண்டிவேல் வெட்டி கொலை

  இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் நேற்று ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஈமு கோழி விவகாரம் அல்லது சொத்து தகராறில் ஆண்டிவேல் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

  போடி பன்னீர்செல்வம் மனைவிகளுக்கு சிறை

  போடி பன்னீர்செல்வம் மனைவிகளுக்கு சிறை

  இந்த வரிசையில் போடிநாயக்கனூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் 2 மனைவிகளுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்துள்ளது. 2 மனைவிகளுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  அடுத்தடுத்து மாஜி எம்.எல்.ஏக்கள்

  அடுத்தடுத்து மாஜி எம்.எல்.ஏக்கள்

  இப்படி அடுத்தடுத்து முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு அசம்பாவிதங்கள் தொடர்ந்து வருகின்றன. கோவில் தீ விபத்து போல முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இது போதாத காலமோ?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  After the mysterious death of former MLA John Jacob, yesterday Ex MLA Vedasandur Andivel also murdered.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற