Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெய்ல் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி... வைகோ எதிர்ப்பு: போராட தயாராகும் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கெய்ல் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம் என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விவசாய மக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மக்கள்நலக்கூட்டணியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வைகோ கூறியுள்ளார்.

தமிழகத்தில் விவசாய நிலங்களில் இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) சார்பில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மத்திய அரசு நிறுவனத் திட்டத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. மேலும், எரிவாயு பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை.மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவற்காக ஒரு குழு அமைத்து, விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் சந்தை மதிப்பின் 40 சதவீதம் இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

TN farmers shocked over the SC's green signal to GAIL

உச்சநீதிமன்றத்தில் உத்தரவு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், அனைத்து கட்சி கூட்டம் நடத்தி மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு சிறப்புசட்டம் உருவாக்கி விவசாய நிலங்களைப் பாதுக்காக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போராடத் தயாராகும் வைகோ

மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் கெயில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூர் வரை குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

விவசாய நிலங்கள் சேதம்

வைகோ தனது அறிக்கையில், கொச்சியிலில் இந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க கெயில் நிறுவனம் சுமார் 1491ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை 5842 நில உரிமையாளர்களிடம் இருந்து பெற்றது. ஆனால், எரிவாயு குழாய்கள் பதிக்கும் போது விவசாய நிலங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏழு மாவட்ட விவசாயிகள்

கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தின் பெரும் பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினைப் பெற்றதால், விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. வேளாண் நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததுடன், அந்நிலங்களுக்கு வேளாண் கடன் அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன. எனவே, ஏழு மாவட்டங்களிலும் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் தீவிரம் அடைந்தது.

தமிழக அரசு தடை

எனவே, ‘எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக மேற்கொள்ள வேண்டும்; ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்தி, நிலங்களை சமன் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று 2013 மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழக அரசின் தடையை எதிர்த்து கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளைத் தொடரலாம் என்றும், இந்தத் திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை மாநில அரசு சமாதானப்படுத்துவதுடன், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2013 நவம்பரில் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றமும் ஆதரவு

இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசும், விவசாய சங்கங்களும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக வழங்கி உள்ள தீர்ப்பு விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2011 இல் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக்கும் சட்டத் திருத்தத்தில், (P & MP Act 1962 Amendment), எரிவாயு குழாய்கள் சேதம் அடைந்தால் அவை பதிக்கப்பட்டு இருக்கும் நிலத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், இதற்காகக் கடும் தண்டனை வழங்க இடம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் விரோத சட்டம்

மக்கள் விரோத பி.எம்.பி. சட்ட திருத்தம் 2011 இல், மாநில அரசு தலையிட அதிகாரம் இல்லை என்று தற்போது உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் நாகாராம் என்ற கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் பலி ஆனார்கள். அங்கு விவசாயிகள் போராட்டம் வெடித்தது.

மறு சீராய்வு மனு

மராட்டிய மாநிலத்தில் உள்ள தபோல் என்ற இடத்தில் இருந்து பெங்களூர் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடுமையான போராட்டங்கள் நடத்தினர். எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்து, விவசாயிகளின் கவலையைப் போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நெடுஞ்சாலை வழியாக

கெயில் நிறுவனம் கொச்சி - பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது; மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்; குஜராத்தில் அகமதாபாத் - பகோதரா மற்றும் காந்திநகர் - சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்; உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்; குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.

போராட தயார்

மேற்கண்ட திட்டங்களைப் போலவே தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை வழியாகவே கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் உரிமை காக்க மறுமலர்ச்சி தி.மு.கழகம், விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் இறங்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

ஈஸ்வரன் கொதிப்பு

விளைநிலம் வழியே கெயில் எரிவாயுக் குழாய் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார். எரிவாயுக் குழாயை விளைநிலத்தில் பதிக்க ஐ.மு.கூட்டணி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஐ.மு.கூ அரசின் ஆணையை இப்போதைய மத்திய அரசு திருத்த கோரிக்கை விடுத்துள்ளது. விளைநிலம் வழியாக எரிவாயுக் குழாய் அமைத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+