5 தமிழக மீனவர்களை விடுவிக்க சல்மான் கானும் முயற்சித்தாராமே.. அப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 தமிழக மீனவர்களை இலங்கை விடுதலை செய்ததற்கும் நடிகர் சல்மான் கானுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நண்பர் பிரபல பத்திரிக்கையாளர் ரஜத் சர்மா. இந்தியா டிவியின் தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் நண்பருமான ரஜத் சர்மா இலங்கை சென்று சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமணத்திற்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை அழைத்தார். அப்போது அவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN fishermen release and Salman Khan

கடந்த புதன்கிழமை இலங்கை 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது. 10 நாட்கள் வெளிநாட்டு பயணம் தெய்த மோடி வியாழக்கிழமை நாடு திரும்பியதும் இரவு 10 மணிக்கு ராஜபக்சேவுக்கு போன் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

சல்மான் கானுக்கும் ராஜபக்சேவின் மகன் நமலுக்கும் நல்ல பழக்கம் உள்ளது. இதனால் சல்மான் கானின் இலங்கை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மத்திய அரசு தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சி செய்துள்ளது. முன்னதாக மீனவர்களை விடுவிக்கக் கோரி மோடி கடந்த 9ம் தேதி ராஜபக்சேவிடம் போனில் பேசியபோது அவருடன் ரஜத் சர்மா இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் நடந்த சல்மானின் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பில் நமல் ராஜபக்சே கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+