கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்... மகனின் கல்விச் செலவே அரசே ஏற்கும்... முதல்வர்
மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: எர்ணாகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியையும் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்விச் செலவை அரசே ஏற்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்து கொண்டு எர்ணாகுளத்துக்கு வந்திருந்தார். நேற்றைய தினம் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை மகனை தேர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டு விடுதிக்கு சென்ற கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது உடல் எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை பெற தமிழகத்தில் இருந்து துணை வட்டாட்சியர் கொண்ட குழு எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும், கேரள அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்தார். மேலும் மகனுக்கு ஆறுதல் கூற தைரியமாக இருக்குமாறும் அறிவுறுத்தினார். அப்போது தன் மகனின் கல்வி செலவுக்கு உதவுமாறு பாரதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.
தமிழக பாஜகவும் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்புச் செலவுக்கு உதவும் என்று தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர் கிராமத்தில் இருந்து நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் என்பவரது தந்தை கிருஷ்ணசாமி என்பவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications