பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவிற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் உத்தரவை மீறி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து இன்னும் 2 நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு, நாளை அல்லது வியாழக்கிழமை கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது என்று முதல்வர் ஓபிஎஸ் பதில் அளித்தார்.
பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள நிலையில், முதல் தடுப்பணைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் ஓபிஎஸ் சட்டசபையில் தெரிவித்தார்.
தடுப்பணை கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமருக்கு ஏற்கனவே தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மத்திய அரசு கொடுத்த அனுமதிக்கும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதன் அடிப்படையில், 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய நீர்வள அமைச்சக ஆணையை மீறி வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளதால், பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான எந்த பணியையும் செய்யக் கூடாது என 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு கேரளாவிற்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
என்றாலும், கேரள அரசு அணை கட்டுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருவதால், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications