ஒரே நேரத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மாற்றம் செய்யப்பட்டு, வணிகவரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையின் ஆணையராக பணியாற்றி வந்த கே.ராஜாராமன் சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை இதுவரை எஸ்.கே.பிரபாகரன் கூடுதலாக கவனித்து வந்தார்.

தொழில்துறை ஆணையர் மற்றும் தொழிற்துறை இயக்குநராக இருந்த ராஜேந்திரகுமார் மாற்றம் செய்யப்பட்டு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா கூடுதலாக கவனித்து வந்தார். அருங்காட்சியகத்துறை இயக்குநராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை கார்த்திகேயன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
சமுகப் பாதுகாப்பு திட்ட ஆணையராக இருந்த பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பொறுப்பையும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா கவனித்து வந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக உள்ள நஜிமுதீன் மாற்றம் செய்யப்பட்டு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications