சசிகலாவை சந்தித்த துணை வேந்தர்களுக்கு ஆளுநர் செக்!
சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: பல்கலைக் கழக துணை வேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவ் கடிதம் அனுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் 11 பேர் கடந்த வாரம் ஒன்று கூடி போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.

அவர்கள் அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சந்தித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் துணை வேந்தர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களிடம் விளக்கம் கேட்டு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை












Click it and Unblock the Notifications