ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை- பெரும்பான்மையை எடப்பாடியார் நிரூபிக்க உத்தரவிடுகிறார்?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். அப்போது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் ஏற்கனவே கடிதம் அளித்துள்ளனர்.

பெரும்பான்மை இழப்பு
அதேநேரத்தில் தாங்கள் அதிமுகவிலேயே தொடருகிறோம்; வேறு ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

கட்சிகள் நெருக்கடி
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்காவிட்டால் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைக்கவும் வாய்ப்பு உள்ளது.

எத்தனை எம்.எல்.ஏக்கள்?
தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது. பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications