அ...ஆ... கற்றுக் கொள்ள தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் கற்றுக் கொள்ள தொடங்கினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகையில் தமிழ் கற்றுக் கொள்ள தொடங்கிவிட்டார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே.ரோசையாவின் பதவி காலம் முடிவடைந்ததும் மகாராஷ்டிரத்தின் ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார்.

TN Governor started to learn Tamil Language

இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு அசாதாரண சூழல்கள் நிகழ்ந்தன. இதனால் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

தற்போது ஆளுநர் மாளிகையில் உள்ள அவர் தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றுக் கொண்டு வருகிறார். அழகான தமிழ்மொழியை கற்பதன் மூலம் மக்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் தமிழ் கற்றுக் கொள்வதாக ஆளுநர் கூறினார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+