போலீஸ் வேட்டையாடிய நடுக்குப்பத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு- திங்களன்று நிவாரணம் அறிவிப்பு!
சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். சட்டசபையில் திங்களன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பாதுகாப்பாக இருந்ததால் போலீசாரால் வேட்டையாடப்பட்ட சென்னை நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார். போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் திங்கள்கிழமையன்று சட்டசபையில் அறிவிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு பாதுகாப்பும் உணவும் வழங்கியவர்கள் மீனவர்கள். இதனாலேயே கடும் ஆத்திரம் அடைந்த போலீசார் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர். ஆட்டோக்கள், மீன் சந்தை உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கினர். குறிப்பாக நடுக்குப்பம் பகுதியில் நரவேட்டையாடியது போலீஸ்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போலீசார் பாஸ்பரஸ் தூவி தீக்கிரையாக்கிய மீனவர் சந்தையையும் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணம் திங்கள்கிழமையன்று சட்டசபையில் அறிவிக்கப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications