கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் 11-வது நாளாக எல்லையோடு நிறுத்தம்!!
சத்தியமங்கலம்/ஓசூர்: கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் தொடர்ந்து 11-வது நாளாக மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டு வருகின்றன.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. கர்நாடகா அரசும் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று நீரை திறப்பதாக அறிவித்திருக்கிறது.

ஆனால் தமிழகத்துக்கு நீரை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் வன்முறை வெடித்து தற்போதுதான் லேசாக இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக லாரிகள், பேருந்துகள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த 5-ம் தேதி முதல் ஓசூர் வழியாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 11 நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த 41 கர்நாடகா அரசு பேருந்துகள் நேற்று நள்ளிரவு அம்மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றன.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications