ஜெ. படத்தை எங்க வைக்கிறது?.. சட்டசபையில் இடம் தேடும் முதல்வர்!
தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை சிறப்பாக நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை படு ஜோராக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம்.
2016ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு காலமானார். இதையடுத்து ஜெயலலிதாவை சிறப்பிக்கும் வகையில் சட்டசபையில் அவரது படத்தை திறக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
கடந்த 24ம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஜெ. படத்திறப்பு விழாவிற்கு வர அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்த விழாவை தனி விழாவாக பிரம்மாண்டமாக நடத்த முதல்வர் திட்டமிட்டள்ளார்.

பிரம்மாண்ட நிகழ்ச்சி
நிகழ்ச்சிக்கான தேதி இன்றும் முடிவு செய்யப்படாத நிலையில் ஜூன் மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வரைபடமா?
படத்திறப்புக்கான தேதியை முடிவு செய்வதற்கு முன்னர் ஜெயலலிதாவின் படத்தை வரைபடமாக வரைய கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் மூலம் வரையலாமா என்று ஆலோசிக்கப்படுகிறது. ஏனெனில் மற்ற தலைவர்களின் படங்கள் அனைத்தும் வரைபடங்களாகவே உள்ளன. அவை தான் இன்றும் சட்டசபையில் தலைவர்களை உயிர்ப்புடன் காட்டுகின்றன, அதனால் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

யார் திறந்தது
தமிழக சட்டசபையில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை 1948ல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரியார் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து சி.ராஜகோபாலாச்சாரியாரின் படத்தை அதே ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.

மற்ற தலைவர்கள் படம்
திருவள்ளுவரின் படத்தை துணை குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் 22.3.1964 அன்றும், அண்ணாவின் படத்தை 10.2.1969 அன்று பிரதமர் இந்திரா காந்தியும் திறந்து வைத்தனர். படிக்காத மேதை காமராஜரின் உருவப்படத்தை 18.8.1977ல் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

ஜெ. திறந்த எம்ஜிஆர் படம்
தொடர்ந்து தந்தை பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப் படங்களை 9.8.1980 அன்று கேரளா கவர்னர் ஜோதி வெங்கடாச்சலம் திறந்துவைத்தார். எம்.ஜி. ஆரின் உருவப்படத்தை 31.1.1992 அன்று ஜெயலலிதா திறந்துவைத்தார்.

எங்கே வைக்கலாம்
தற்போது சட்டசபைக்குள் ஜெயலலிதாவின் படத்தை அனைவரின் பார்வையிலும் பளிச்சென தெரியும் வகையில் நல்ல முக்கியமான இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக நல்ல இடத்தைத் தேடி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications