கனிம மணல் கொள்ளை வழக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Sand mineral scam
சென்னை: கனிம மணல் கொள்ளை வழக்கில் ஆய்வறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்திடம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கனிம மணல் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,ஆய்வறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்க தமிழக அரசு மறுத்ததோடு, இதுகுறித்து பதில் மனு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், மூடி முத்திரையிட்ட உறையில் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமே என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், அரசு முடிவு என்பதால், அதனை நீதிமன்றத்தில் வழங்க இயலாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் பதில் மனுவை பொறுத்து, உத்தரவு வழங்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+