பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான பவானி குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி வழங்க ஜெ. அன்பழகன் கோரிக்கை!
சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான பவானி குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு சர்ச் சாலை குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு கர்நாடகா அரசு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது.
E-Mail sent to our Hon'ble CM regard to d Compensation for Bhavani Devi who lost her lives in Bangalore Bomb Blast. pic.twitter.com/CFJN7N380i
— J Anbazhagan (@JAnbazhagan) January 2, 2015 ஆனால் பவானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட தமிழக அரசு தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை. இந்த நிலையில் பவானி குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெ. அன்பழகன் அனுப்பி வைத்துள்ள கடிதம்:
எனது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிதேவி என்பவர் உறவினர் வீட்டுக்கு பெங்களூர் சென்று இருந்த போது சாலையில் நடந்து கொண்டிருந்த போது தீவிரவாதிகள் சதியால் குண்டுவெடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை இழந்துவாடும் அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகள் பரிதவித்துக் கொண்டுள்ளனர். மறைந்த பவானிதேவி குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.
தமிழக அரசும் கனிவுடன் பரிசீலித்து மேற்கண்ட குடும்பத்துக்கு நிதியை கொடுத்து உதவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்பழகன் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications