கிரிஜா வைத்தியநாதன் பொய்யான காரணம் சொல்கிறார்.. கருணாநிதிக்கு இடம் கிடைக்கும்.. வழக்கறிஞர் துரைசாமி
திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடத்தை மறுக்க அரசு தவறான காரணத்தை சொல்கிறது, கண்டிப்பாக கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கும் என்று வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடத்தை மறுக்க அரசும், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் தவறான காரணத்தை சொல்கிறார்கள், கண்டிப்பாக கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கும் என்று வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.

இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது. காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மெரினாவில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு எதிராக வழக்கு தொடுத்த மூத்த வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்துள்ளார். கருணாநிதி சமாதி வழக்கு குறித்து அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடத்தை மறுக்க அரசு தவறான காரணத்தை சொல்கிறது. 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கூடாது என்பது ஏற்புடையது இல்லை. இப்போது வழக்குகளை வாபஸ் பெற்றுவிட முடிவெடுத்துள்ளோம். ஜெ. நினைவிடம் கட்ட இடம் கொடுக்க கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்துள்ளோம். அது கடல் பகுதியில் இருக்கிறது.
அண்ணா சமாதிக்கு பின்னால்தான் கருணாநிதிக்கு இடம் கேட்கிறார்கள். இது கடல் பகுதியில் வரவில்லை. இது கூவம் பகுதியில்தான் வருகிறது. இந்த இடம் கடற்கரை பகுதியில் வராது, நான் போட்டுள்ள வழக்கிற்கும் இதற்கும் துளி சம்மந்தம் கிடையாது.
ஆனால் தமிழக அரசு இது கூட தெரியாமல் வேண்டும் என்றே பிரச்சனை செய்து இருக்கிறார்கள். பொய்யான காரணத்தை கூறி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடமளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு திமுக மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அது மட்டுமே காரணம்.
நானும், பாலுவும் வழக்கை வாபஸ் பெறுவதால் திமுகவிற்கு சட்ட சிக்கல் கிடையாது. கருணாநிதிதான் எங்களுக்கு முக்கியமே தவிர வேறு எதுவும் இல்லை. 5 வழக்குகளில் நான்கு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
இதனால் தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாவே வரும். கண்டிப்பாக கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கும் என்று வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications