தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி விண்ணப்பம் விநியோகம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
சென்னை: ஏப்ரல் மாதத்துக்கு முன்பு எல்.கே.ஜி.யில் சேர விண்ணப்பம் வினியோகித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதையும் மீறி விண்ணப்பம் விற்பனை செய்த பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஜூன் மாதம் தொடங்கப்படும் படிப்புக்கு ஜனவரி மாதத்திலேயே விண்ணப்பம் கொடுக்கப்படுகிறது. நீண்ட கியூ வரிசையில் நின்றுதான் விண்ணப்பங்களை பெறுகிறார்கள்.
சில பள்ளிகளில் இரவிலேயே வரிசையில் நின்று மறுநாள் விடிந்த பிறகு விண்ணப்பம் பெறும் நிலையும் உள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சளுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் பிச்சை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்கு பின்னர் தான் பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கான விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னர்தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றும் இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
ஆனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு நேற்று வெயிலில் ஏராளமான பெற்றோர்கள் வரிசையில் நின்றிருந்தனர்.
இது குறித்து இயக்குனர் பிச்சை கூறுகையில், இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வரை அனுப்பி விசாரிக்க சொல்லி இருக்கிறேன். இப்படி எந்த பள்ளியும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பம் கொடுக்கக்கூடாது. மீறி கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications