ஜூன் மாதம் தமிழகத்தில் 40% அதிக மழை பதிவு.. தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை: தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் மாதத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 40% அதிக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கேரளா கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் மாதத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 40% அதிக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications