தமிழகத்தில் பொம்மை ஆட்சி போய், பினாமி ஆட்சி போய் இரட்டை ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின்
தஞ்சாவூர்: தமிழகத்தில் பொம்மை ஆட்சி போய், பினாமி ஆட்சியும் போய் தற்போது இரட்டை ஆட்சி நடக்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை புது ஆற்றுப்பாலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ''இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை ஒட்டு மொத்தமாக நாம் பார்த்தால், வருகின்ற 2016ல் தமிழகத்தில் மீண்டும் கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான்.
கல்லூரி மாணவ-மாணவிகளை நான் சந்தித்து பேசியபோது அவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றால் எங்களையும் அழையுங்கள், தி.மு.க.வோடு இணைந்து போராட நாங்களும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறியதைப்போல் இனி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்கு கட்சிப்பணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
கட்சி பணிகள் செய்பவர்களுக்கு பதவிகள் கொடுக்காவிட்டாலும் அவர்களை தட்டி கொடுக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு மூலம் நான் தெரிந்து கொண்டேன்.
தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோர், நடுத்தர மக்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு எதிரான வழியில் செயல்படும் ஆட்சிக்கு வருகிற 2016 தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
2016ல் தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்திட வேண்டும். அதற்காக இப்போதே நாம் சபதம் ஏற்போம்" என்றார் மு.க.ஸ்டாலின்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications