உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தேர்தல்.. தலைவராக சத்தியமூர்த்தி தேர்வு
திருச்சி: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தலில், மாநில தலைவராக சாமி.சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தேர்தல் 18.10.2015 அன்று திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாநில முதன்மை தேர்தல் ஆணையர் இயக்க புரவலர் ராஜீ, மாநில இணை தேர்தல் ஆணையர்கள் இயக்க புரவலர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் இயக்க புரவலர் ஜி.கோலக்காரன் ஆகியோரால் தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பெயர்கள் இரவு 9 மணி அளவில் அறிவிக்கப்பட்டன.
மாநில தலைவராக சாமி.சத்தியமூர்த்தி (புதுக்கோட்டை), மாநில பொதுச்செயலாளராக பி.நடராசன் (திருவண்ணாமலை), மாநில பொருளாளராக பி.ரவிச்சந்திரன் (காஞ்சிபுரம்), மாநில அமைப்புச்செயலாளராக ஏ.பீட்டர் ராஜா (சிவகங்கை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாநில துணைத் தலைவர்களாக சி.சத்தியசேகரன் (இராமநாதபுரம்), பி.ராமச்சந்திரன் (கடலூர்), இரா.மணிவண்ணன் (திருவாரூர்), ஜி.ஜெயராஜ் (திருநெல்வேலி), ஜி.சதாசிவம் (கோவை), மு.இளங்கோவன் (தருமபுரி), ஓ.அன்புராசன் (திருச்சி), ஆ.அருண்குமார் (வேலூர்), டி.கருணாகரன் (திருவள்ளுர்) ஆகியோரும், மாநில இணைச்செயலாளர்களாக இரா.குணசேகர பாண்டியன் (நாமக்கல்), கே.ஜெயசங்கர் (திருவண்ணாமலை), இரவீந்திரன் (இராமநாதபுரம்), எம்.பழனிச்சாமி (திருப்பூர்), சி.கோவிந்தன் (கிருஷ்ணகிரி), டி.முத்துகிருஷ்ணன் (சிவகங்கை), ச.செல்வம் (கரூர்), டி.எஸ். பிரபக்குமார் (கன்னியாகுமரி), ஏ.தமிழ்ச்செல்வன் (நாகப்பட்டினம்) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில சட்ட செயலாளார்களாக ஜெ.கலைச்செல்வன் (சென்னை), பாபு (மதுரை) ஆகியோரும், மாநில மகளிரணி அமைப்பாளர்களாக இராபியா பீபி (திருப்பூர்), எஸ்.செல்வி (புதுக்கோட்டை) ஆகியோரும்,; தலைமை நிலைய செயலாளராக எம்.ஜி.தயாளன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாநில நிர்வாகிகளுக்கு இயக்க புரவலர் பி.அருள்சுந்தரராசன், முன்னாள் மாநிலத்தலைவர் வே.நடராசன், முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர் ச.மோகனசுந்தரம், முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆ.முருகையன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications