பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு! விற்பனை விலை உயராது

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கூறப்பட்டுள்ளதாவது:
" தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கையினைப் பரிசீலிக்கும் பொருட்டு, இன்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பின், பசுந் தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டும்; அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையையும், பால்
கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளதைக் கருத்தில் கொண்டும்; பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டும்; பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.1.2014 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த பால் கொள்முதல் உயர்வினையடுத்து, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 31 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதன் பயனாக தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள சுமார் 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
இந்தக் கொள்முதல் விலை உயர்வால் ஓர் ஆண்டிற்கு 273 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, பால் விற்பனை விலை உயர்த்தப்படமாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications